யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(23) மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் புனரமைப்பு, பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(23) மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்தார்.
இதன்படி, நாளை காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். அளவெட்டி, பன்னாலை, மல்லாகம் ஒரு பகுதி, மல்லாகம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி, தூதாவளை பிரதேசம், மந்திகை, உபய கதிர்காமம், முள்ளி, வல்லிபுரம், வல்லிபுரம் நீர்ப்பாசன மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”