உயர் அழுத்த மின்சார தூணுடன் லொறி மோதி விபத்து!! (படங்கள்)
வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கனரகவாகனமும், உயர் அழுத்த மின்சார தூணும் சேதமடைந்த நிலையில் வாகனத்தின் சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர் பிழைத்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்… பொலநறுவையில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற கனரகவாகனம் வவுனியா புளியங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போதுகட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த உயர் அழுத்த மின்சார தூணுடன் மோதி விபத்தை ஏற்ப்படுத்தியது.
விபத்தில் கனரகவாகனமும், மின்சாரதூணும் சேதமடைந்தது. விரைந்து செயற்பட்ட மின்சார சபையினர் மின் வழங்கலை துண்டித்திருந்தமையால் அசம்பாவிதங்கள் எவையும் இடம்பெற்றிருக்கவில்லை.
விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”