பாடசாலை போக்குவரத்து வாகன ஓட்டுனர்களுக்கு என்டிஜன் பரிசோதனை!!

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் போக்கவரத்தின் போது சுகாதார நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படுகின்றதா என்பது தொடர்பில் பொலிஸார் அதிக கவனம் செலுத்துவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் நாளை முதல் பாடசாலை போக்குவரத்து வாகனங்களின் ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு எழுமாறாக துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.