திருகோணாமலையில் மாணவர்கள் உட்பட 14பேருக்கு கொரோனா!!

திருகோணாமலை டைக் வீதியில் நான்கு வீடுகளை சேர்ந்த 14 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் பணியாற்றும் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருடைய வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ள வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பாடசாலை மாணவர்களும் உள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.