இன்றும் கூடும் கிழக்கு முனையம் தொடர்பான குழு!!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று (25) ஐந்தாவது தினமாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துறைமுக தொழிற்சங்கம் முன்வைத்த ஆலோசனையுடன் ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பங்களின் ஆலோசனைகள் தொடர்பிலும் இதன்போது ஆய்வு செய்யப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் குறித்த ஆய்வு அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.