3 ஆம் கட்ட நிர்மாண பணிகள் ஆரம்பம்!!

கட்டசெத் சிறிபாய கட்டிட தொகுதி நிர்மாணத்தின் 3 ஆம் கட்ட பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பத்தரமுல்லையில் உள்ள அரசாங்க கட்டிட தொகுதியில் இதற்கான நிர்மாண பணிகள் கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகின.
கொழும்பில் செயற்பட்டு வரும் பல அரசாங்க அலுவலகங்களை இந்த பகுதிக்கு இடமாற்றுவதே இந்த கட்டிட நிர்மாணத்தின் நோக்கமாகும். இந்த கட்டிட தொகுதிக்காக 16.7 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.
இரண்டரை வருட காலத்திற்குள் இந்த நிர்மாண பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன.