கொரோனா வைரஸ் மருந்தினை யாருக்கு முதலில் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது- சவேந்திரசில்வா!!

கொரோனா வைரஸ் மருந்தினை வழங்குவது தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள இராணுவதளபதி சவேந்திரசில்வா யாருக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னிலை பணியாளர்களிற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முன்னிலைபணியாளர்களிற்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு விமானநிலையத்திற்கு மருந்து வந்து சேர்ந்ததும் இராணுவத்தினர் அவற்றை சேமிக்கும் இடத்தை கொண்டு செல்வார்கள் என தெரிவித்துள்ளார்.