பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்- ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை தெரிவிப்பு!!

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஐரோப்பிய ஓன்றியத்திடம் தெரிவித்துள்ளது.
இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் கூட்டு ஆணைக்குழுவின் 23 மூன்றாவது சந்திப்பை வீடியோகொன்பரன்சிங் முறை மூலம் நேற்று நடத்தியுள்ளன.
இந்த சந்திப்பின்போதே இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளது.
நேற்றைய சந்திப்பில் இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் அதனை சர்வதேச தராதரஙகளிற்கு ஏற்ற வகையில் மாற்றவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தில் உரிய மாற்றங்களை மேற்கொள்வதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் குறித்த ஏற்பாடுகளை மீளாய்விற்கு உட்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.