கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சிலருக்கு கொரோனா !!

கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சேவையாற்றும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அலுவலகத்தில் சிலருக்கு சந்தேகத்திற்கிடமான நோய் அறிகுறிகள் காணப்பட்டதினால் குறித்த அலுவலகத்தில் உள்ள 100 பேருக்கு பிசிஆர் பரிசோதனையும் 31 பேருக்கு அன்டிஜன் பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனைகளின் அடிப்படையில் இவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த தினங்களில் கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்திற்கு வருகை தந்தவர்களுக்கு சந்தேகத்திற்கிடமான நோய் அறிகுறிகள் இருப்பின் சுகாதார சேவகரிற்கு அறிவித்து பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.