சடலங்கள் தகனம் தொடர்பில் அரசாங்கத்தை வலியுறுத்தும் ஐ.நா !!

கொவிட்-19 தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை கட்டாயமாக தகனம் செய்வதற்கான தீர்மானத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
உயிரிழப்பவர்களின் சடலங்களை கட்டாயமாக தகனம் செய்வது நாட்டிலுள்ள முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினரின் நம்பிக்கைகளுக்கு முரணானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட உறுப்பினர்களான அஹமட் ஷஹீட், பெர்னாண்ட் டி வரென்னெஸ், கிளெமென்ட் நயலெட்சோச்சி வூலே மற்றும் லாலெங் மொபோகெங் ஆகியவர்களினால் குறித்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.