எரிபொருள் விலைகளை அதிகரிப்பு தொடர்பில் எந்தத் தீர்மானமும் இல்லை: ஹெகலிய ரம்புக்வெல!!!

எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று அவர் இதைக் கூறினார்.
அரசாங்கம் இது தொடர்பில் ஏதாவது முடிவெடுத்துள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில், அமைச்சரவையில் இவ்விவகாரத்தின் பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன என அமைச்சர் கூறினார்.