சிவனொளி பாத மலை யாத்திரைப் பாதையைச் செப்பனிட அமைச்சரவை அங்கீகாரம்!!

சிவனொளிபாத மலை(ஸ்ரீபாத) யாத்திரிகர்கள் பயன்படுத்தும் குருவிட்ட- ஏரத்ன பாதையின் அடையாளம் காணப்பட்ட பகுதிகளைச் சரிசெய்ய நீர்ப்பாசன அமைச்சரும் தேசிய பாதுகாப்பு, உள்விகார மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும் முன்மொழிந்த திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஸ்ரீபாத யாத்திரிகர்கள் பயன்படுத்தும் மூன்று பிரதான பாதைகளில் இதுவும் ஒன்று என்பதுடன் 1 லட்சம் யாத்திரிகள் ஸ்ரீபாத யாத்திரரைப் பருவம் ஒன்றில் இப்பாதையைப் பயன்படுத்து கின்றனர்.
நீண்ட காலமாக இப்படிகள் திருத்தப்படாததால் யாத்திரிகர்கள் இப்பாதையைப் பயன்படுத்துகையில் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.
புகையிரதப் பாதை பழுதுபார்த்தலின் போது அகற்றப்படும் சிலிப்பர் கட்டைகளைக் கொண்டு இந்தப் பாதை செப்பனிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.