யாழ்.மாநகருக்குள் மக்கள் நடமாட்டம் வீதிகளில் சமிக்ஞை விளக்குகள் பொருத்த தீர்மானம்!! (படங்கள்)
யாழ்.மாநகருக்குள் மக்கள் நடமாட்டம் அதிகமான மேலும் சில வீதிகளில் சமிக்ஞை விளக்குகள் பொருத்த யாழ்ப்பாணம் பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலமையில் நடைபெற்றிருந்தது.
இதன்போது குறித்த விடயம் ஆராயப்பட்டுள்ளது.
இதன்படி யாழ்ப்பாணத்தில் ஸ்ரான்லி வீதி – கே.கே. எஸ் வீதி சந்தி, ஸ்ரான்லி வீதி – மணிக்கூட்டுவீதி சந்தி, கஸ்தூரியார்வீதி – நாவலர்வீதி சந்தி, இலுப்பையடி சந்தி, கொழும்புதுறை வீதி – பழைய பூங்கா வீதி சந்தி போன்ற இடங்களுக்கான புதிய வீதி சமிஞ்ஞைகள் பொருத்துவதற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதற்கான முடிவுகள் பெப்ரவரி 2ஆம் திகதி யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”