கையில் சரக்குடன்.. மாலத்தீவில் மல்லாக்க படுத்திருக்கும் வனிதா.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்! (படங்கள்)
நடிகை வனிதா கையில் சரக்குடன் மாலத்தீவில் மல்லாக்க படுத்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. நடிகை வனிதா விஜயக்குமார் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் பிரபலமானதோடு பிஸியாகவும் ஆகிவிட்டார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வின்னரான வனிதா விஜயக்குமார் தொடர்ந்து கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் ஜட்ஜ்ஜாகவும் இருந்து வருகிறார்.
பிக்பாஸ் வனிதா தர்பார்
மேலும் யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வரும் வனிதா, அதில் சமையல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் குறித்தும் ரிவ்வியூ கொடுத்து வருகிறார். லிப்லாக் போட்டோஸ் லிப்லாக் போட்டோஸ் ஊரடங்கு நேரத்தில் தனது யூட்யூப் சேனலுக்கு உதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் வனிதா. கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் வனிதாவும் பீட்டர் பாலும் லிப்லாக் கொடுத்துக் கொண்டனர்.
கணவருடன் கோவா ட்ரிப்
அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வனிதாவை விளாசி தள்ளினர். லாக்டவுனை தொடர்ந்து சில ரிலாக்ஸேஷன்கள் அறிவிக்கப்பட்டன. அப்போது காதல் கணவருடன் கோவா புறப்பட்டார் வனிதா. இதெல்லாம் தேவையா? இதெல்லாம் தேவையா? அங்கிருந்தும் இருவரும் பல ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்டனர். அவற்றை பார்த்த ரசிகர்கள் வயதுக்கு வந்த பெண்ணை வைத்துக் கொண்டு இது தேவையா என்று விளாசினர்.
பீட்டரை பிரிந்த வனிதா
ஆனால் கோவாவில் இருந்து திரும்பும் போதே இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டது. பீட்டர் பால் குடித்துவிட்டு மட்டையானதாக வீட்டை விட்டே வெளியேற்றினார் வனிதா. இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாக தானும் பீட்டர் பாலும் பிரிந்துவிட்டதாக கூறி வீடியோ வெளியிட்டார் வனிதா.
மாலத்தீவில் இருந்து போட்டோ
அதன்பிறகு கலக்கப்போவது யார், சமையல் நிகழ்ச்சி, பிக்பாஸ் வனிதா தர்பார் என இருந்த வனிதா தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். மாலத்தீவில் இருந்தப்படியே அண்மையில் போட்டோ ஒன்றை ஷேர் செய்தார். சரக்குடன் மல்லாக்கப்படுத்து.. சரக்குடன் மல்லாக்கப்படுத்து.. அதனை பார்த்த ரசிகர்கள், புதிய கணவருடன் ஹனிமூனா என கேட்டு வந்தனர். இந்நிலையில் வனிதா கையில் சரக்கு கிளாஸுடன் மல்லாக்க படுத்திருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது.
இன்னும் எதிர்பார்க்கிறோம்
இதனை பார்த்த ரசிகர்கள் என்ன மேடம் செம போதையா என கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் யாருடன் சென்றிருக்கிறீர்கள் என்றும் இன்னும் சில போட்டோக்களை ஷேர் செய்யுங்கள் என்றும் கேட்டு வருகின்றனர்.