டெல்லி செங்கோட்டையில் போலீசார் மீது கொடூர தாக்குதல்- பதறவைக்கும் அதிர்ச்சி!! (வீடியோ)

டெல்லி செங்கோட்டையில் அத்துமீறி நுழைய வன்முறை குழுவினரால் போலீசார் மிக கொடூரமாக தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஒரு பிரிவினர் போலீஸ் தடையை மீறி டெல்லிக்குள் நுழைந்தனர். அத்துடன் டெல்லி செங்கோட்டைக்கு சென்று சீக்கியர் கொடியை ஏற்றினர்.
டெல்லிக்குள் தடையை மீறி நுழைந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர்புகை குண்டுகள், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனிடையே டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த குழுவினர் அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை விரட்டி விரட்டி தாக்கும் காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. போராட்டகாரர்களின் பிடியில் இருந்து தப்பிக்க மதில்களில் இருந்து போலீசார் விழுகின்றன காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஒருகட்டத்தில் போலீசார் பின்வாங்க அவர்களை போராட்டக்காரர்கள் விரட்டி தாக்கும் காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.