டெல்லி மோதல்கள்- ஊழியர்களுக்கு அமெரிக்கா தூதரகம் எச்சரிக்கை !!

டெல்லியில் விவசாயிகளின் போராட்டங்களில் வன்முறை வெடித்த போது ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க அமெரிக்க தூதரம் அறிவுறுத்தல் விடுத்தது. டெல்லியில் விவசாயிகள் போராட்ட குழுவினரில் ஒரு பகுதியினர் திடீரென டெல்லி நகருக்குள் நுழைந்தனர். டிராக்டர்களுடன் டெல்லி நகருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்த தடையை மீறியதால் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சுகள், தடியடிகள் நடத்தினர். இம்மோதல்களால் டெல்லி போர்க்களமானது. இதனையடுத்து மோதல்கள் நிகழும் பகுதிகளுக்கு ஊழியர்கள், அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அத்துடன் மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள், அமெரிக்கர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
டெல்லி செங்கோட்டையில் போலீசார் மீது கொடூர தாக்குதல்- பதறவைக்கும் அதிர்ச்சி!! (வீடியோ)