;
Athirady Tamil News

இளம் தொழில் முனைவோருக்கான ஒரு இலட்சம் இலவச காணி துண்டுங்குள் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வுகள் ஆரம்பம்!!

0

இளம் தொழில் முனைவோருக்கான ஒரு இலட்சம் இலவச காணி துண்டுங்குள் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வுகள் ஆரம்பம்

இளம் தொழில் முனைவோருக்கு இலவச காணித் துண்டுங்கள் வழங்கும் திட்டத்திற்காக ஒரு தொகுதியினருக்கான நேர்முகத் தேர்வுகள் வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.

காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச தொழில் முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அரச காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் இளம் தொழில் முனைவோர்களுக்கு இலவச காணித்துண்டுகள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் நாடு பூராகவும் கோரப்பட்ட நிலையில் வவுனியா பிரதேச செயலகத்தில் விவசாயம் மற்றும் பண்ணை அமைக்கும் தொழில் முயற்சிக்காக அதிகளவிலான இளைஞர், யுவதிகள் காணி கோரி விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களில் ஒரு தொகுதியினருக்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் 28, 29, 30 மற்றும் 4 ஆம் திகதிகளில் வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது. விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கான கடிதங்கள் கிராம அலுவலர் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + six =

*