;
Athirady Tamil News

ஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து வைத்த முதல்வர்.. தொண்டர்கள் ஆரவாரம்!! (வீடியோ, படங்கள்)

0

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா, திரளான தொண்டர்கள் மத்தியில், இன்று நடைபெற்றது.

சென்னையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே 8ம் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர்.

திறந்து வைப்பு

இந்தநிலையில் தற்போது நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று காலை 11.15 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மலர் வளையம் வைத்து, குனிந்து கும்பிட்டார். இதையடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் மலர் தூவி கும்பிட்டார். அங்கு வைக்கப்பட்ட தீபத்தை தொட்டுக் கும்பிட்டார். முன்னதாக விழா கல்வெட்டை முதல்வர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர்.

ஜெயலலிதா நினைவிட சிறப்பம்சங்கள்

ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனைச் சார்ந்த கட்டமைப்புகள், 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில், ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. இந்த நினைவிடத்தில் 15 மீட்டர் உயரம், 30.5 மீட்டர் நீளம் கொண்டது. 43 மீட்டர் அகலமும் கொண்டது. மிகப்பெரிய பீனிக்ஸ் பறவை போன்ற அமைப்பில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

கலை வேலைப்பாடு

நினைவிட வளாகத்தில் அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லாலான நடைபாதை, 1.20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ள தரைப்பகுதி, புல்வெளி மற்றும் நீர்த்தடாகங்கள், சுற்றுச்சுவர், அலங்கார மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், சிற்ப கலை வேலைப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் அருங்காட்சியம்

அத்துடன் ரூ.12 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு உள்ளது. அதில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், மக்களுக்குச் செய்த சேவைகள், வீடியோ மற்றும் ஆடியோ காட்சி பிரிவு, ஜெயலலிதாவின் ஊக்க உரைகள், சிறுகதைகள், படங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நமது நாட்டிலேயே அரசியல் தலைவர் ஒருவருக்கான நினைவிடத்தில் டிஜிட்டல் முறையில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

போக்குவரத்து மாற்றம்

நினைவிட திறப்பு விழைவையொட்டி, காமராஜர் சாலையில், வார் மொமோரியலில் இருந்து கண்ணகி சிலை வரை காலை 06.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம் சாலை, வி.கே.ஐயர் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் சந்திப்பு, லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வை சென்றடையலாம்.ஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்… இங்கு வந்தாலே வீரம் பிறக்கும்: ஓபிஎஸ்!!

“சித்தி ரிட்டர்ன்ஸ்”.. பிப்ரவரி முதல் சாட்டையடி… ரெடியாகும் அமமுக.. பாஜகவின் 2 ஆப்ஷன்!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + 16 =

*