சிகிச்சை பெற்று திரும்பிய இராஜாங்க அமைச்சர் தெரிவித்த விடயம்!!

கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் கொக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து வௌியேறும் போது இராஜாங்க அமைச்சர் ஊடங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
” உயிர்கொல்லி கொவிட் தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் ஒழிந்திருக்க வேண்டாம் என நான் கூறுகிறேன். வைத்திய ஆலோசனைகளை கடைப்பிடியுங்கள்”. என்றார்.
இதேவேளை, இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளான 7 ஆவது பாராளுமன்ற உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ சிகிச்சைக்காக கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வரும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குணமடைந்து வருவதாக அந்த அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.