அங்கேயும் அந்த கருத்தை முன் வைத்த ஆரி.. பாலாஜியை மொய்த்த இளம் பெண்கள்.. பிக்பாஸ் கொண்டாட்டம்! (படங்கள்)
பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கான புரமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் 105 நாட்கள் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த மாதம் 17 ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் நடிகர் ஆரி அர்ஜூனன் வின்னரானார்.
அவருக்கு ட்ரோஃபியும் 50 லட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. பாலாஜி முருகதாஸ் இரண்டாவது இடத்தை பிடித்து ரன்னர் அப் ஆனார்.
பிக்பாஸ் கொண்டாட்டம்
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு அதன் சக்சஸ் பார்ட்டி நடைபெற்ற நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாம் நடைபெற்றது. பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கடந்த வாரம் நடைபெற்றது.
ஆட்டம் பாட்டம் என ரகளை
இதன் போட்டோக்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் புரமோ வெளியாகியுள்ளது. இதில் ஆட்டம் பாட்டம் என போட்டியாளர்கள் ரகளை செய்துள்ளனர்.
அன்பு ஜெயிக்கும்னு நம்புறீயா?
ஓபனிங்கே அன்பு ஜெயிக்கும்னு நம்புறீயா என் கேட்கிறார் அர்ச்சனா. மேலும் அர்ச்சனா தனது மகள் ஸாராவுடன் நடனமும் ஆடியுள்ளார். அடுத்து பேசும் ஆரி நான் ஜெயிக்கணும்னு விளையாடுனேன், நான் மட்டும்தான் ஜெயிக்கணும்னு விளையாடல என்று கூறுகிறார்.
டிரைவர் மகன்
தொடர்ந்து பேசும் ரியோ, ஒரு டெயிலர் மற்றும் டிரைவரோட பையன் இன்னைக்கு உங்க முன்னாடி இப்படி நிக்கிறேன் என்று அவருடைய அம்மாவையும் அப்பாவையும் அறிமுகம் செய்து வைக்கிறார். மொய்த்த இளம்பெண்கள் மொய்த்த இளம்பெண்கள் தொடர்ந்து பாலாஜியை சுற்றி மொய்த்த இளம் பெண்கள் அவருக்கு ரெட் ரோஸ்களை அள்ளிக் கொடுக்கின்றனர். மேலும் கிரீடம் சூட்டி இளவரசர் லுக்கில் காட்டுகின்றனர். இதனால் பூரித்து போகும் பாலாஜி, என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன் என்று பாடினார் கண்ணீர் விட்ட அனிதா கண்ணீர் விட்ட அனிதா தொடர்ந்து அனிதாவின் கணவரான பிரபாகரன் மேடையில் அனிதா குறித்து புகழ்ந்து பேசுகிறார். இதனைக் கேட்ட அனிதா கணவரை கட்டியணைத்து கண்ணீர் விடுகிறார். தொடர்ந்து ரம்யா பாண்டியனுக்கு ஒரு செடியை கொடுத்து மாலை அணிவித்து பாராட்டுகின்றனர்.
தரம் தாழ்ந்த விஷயங்கள்
இதேபோல் ஆரிக்கும் தலையில் பரி வட்டமெல்லாம் கட்டிய விவசாயிகள், ஆரியின் வெற்றியை விவசாயிகளின் வெற்றியாக பார்க்கிறோம் என்று கூறுகின்றனர். தொடர்ந்து பேசும் ஆரி தரம் தாழ்ந்த விஷயங்களை தயவு செய்து எல்லோரும் தவிர்ப்போம் என கூறுகிறார்.
வரும் ஞாயிறு
தொடர்ந்து பழைய போட்டியாளர்களின் ஆட்டம் பாட்டம் என செம கலக்கலாக உள்ளது பிக்பாஸ் கொண்டாட்டம். பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி வரும் ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.