சுன்னாகம் சி.குமாரவேள் அவர்களின் 31 ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வு.. (படங்கள்)

சுன்னாகம் சி.குமாரவேள் அவர்களின் 31 ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வு.. (படங்கள்)
அண்மையில் காலமான சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் மூன்று தசாப்த கால தலைவர் சி.குமாரவேள் அவர்களின் 31 ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வு இன்று சுன்னாகம் பல நோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
செ.இலகுநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் யாழ்.மாவடட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதன் போது அமரரின் சேவைகள் தொடர்பாக கலந்து கொண்டவர்கள் உரையாற்றியதோடு சங்க பணியாளர்களும் மலரஞ்சலி செலுத்தினார்கள்.