;
Athirady Tamil News

பிரான்சில் சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் 57 சதவீதம் அதிகரிப்பு..!

0

பிரான்ஸ் நாட்டில் சிறுவர்கள் மீதான ஓன்லைன் பாலியல் துன்புறுத்தல்கள் 57 சதவீதம் அதிகரித்துள்ளதாக குழந்தைகள் பாதுகாப்பு குழு ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பிரான்சில் கோவிட் -19 தொற்றுநோய் வந்ததிலிருந்து இணையதளத்தை அதிக நேரம் பயன்படுத்தும் சிறுவர் சிறுமிகளுக்கு ஓன்லைன் துன்புறுத்தல் அதிகரித்துள்ளதாகவும், 14 முதல் 16 வயதுடைய இளம் பெண்களை நோக்கி பாலியல் ரீதியான மிரட்டல்களும் துன்புறுத்தல்களும் குறிவைக்கப்படுவதாக E-enfance எனும் குழந்தைகள் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது

ஓன்லைன் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக கடந்த வசந்த காலத்தில் மட்டும் வழக்கத்தை விட 30 சதவீதம் அதிகமான உதவி அழைப்புகள் வந்துள்ளதாகவும், அதில் பெரும்பாலானோர் இளம் பருவத்தினர் என்றும் E-enfance குழு கூறியுள்ளது.

பதின்ம வயது பெண்களுக்கு ஆபாசமான படங்களை அனுப்புவது, அவர்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றிய புகைப்படங்களை எடுத்து ஆபாச தளங்களில் வெளியிடுவதாக மிரட்டுவது, பணம் பறிப்பது அல்லது பாலியல் தொல்லைகள் கொடுப்பது போன்ற ‘Sextortion’ குற்றங்கள் 57 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

பெரும்பாலான இளம் ஆண்கள் Revenge Porn எனப்படும் தங்கள் முன்னாள் காதலியை, அவர்களுடன் நெருக்கமான நேரங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை கொண்டு மிரட்டி பயன்படுத்திக்கொள்வதாகவும், குறிப்பாக 14 முதல் 16 வயது மிக்க சிறுமிகள் இதில் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பலரும் Webcam blackmail போன்ற துறப்புறுத்தல்களுக்கு ஆளாவதாக தெரியவந்துள்ளது. இதில் 14 வயதுக்கு மேற்பட்ட சிறார்களும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Webcam blackmail என்பது ஒருவரை மிரட்டி ஒன்லைனில் Webcam முன்னிலையில் வற்புறுத்தி ஆடைகளை கழட்ட வைத்து, பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்வதாகும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.