;
Athirady Tamil News

கனடா புங்குடுதீவு இறுப்பிட்டி அபிவிருத்தி சங்கத்தின் சார்பில், வீடுகள் கையளிப்பு.. (படங்கள் & வீடியோ)

0

கனடா புங்குடுதீவு இறுப்பிட்டி அபிவிருத்தி சங்கத்தின் சார்பில், வீடுகள் கையளிப்பு.. (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவு இறுப்பிட்டியில் நுணுக்கல் பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் கடந்த வருடம் பெய்த கடும்மழை மற்றும் வெள்ளத்தால் தங்கள் வாழ்விடங்களில் வாழமுடியாத சூழ்நிலையில் பாடசாலையில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு, அதிலும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குறிப்பிட்ட சிலரில்,
1). தவராசா..வசிகரன் குடும்பத்தினர்.. -புங்குடுதீவு.-4 நுனுக்கல்
2) செல்வராசா குகதாசன் குடும்பத்தினர்.
3) செல்வராசா தர்மபூபதி குடும்பத்தினர்.
4) அப்பையா..வேனுதாஸ் குடும்பத்தினர்.
5) இராசேந்திரம்.. ரகுவரன் குடும்பத்தினர்.
6) முத்துராசா.. அஜந்தன் குடும்பத்தினர்..
அவர்களின் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தும் வகையில் இறுப்பிட்டி அபிவிருத்தி சங்கத்தின் கனடா கிளையால் ஆறு குடும்பங்களின் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.

அப்பகுதி கிராம சேவகர் மற்றும் நல்லதம்பி வில்வநாதன் ஆகியோரால் பயனாளிகளுக்கு இன்று காலை 10.30 மணியளவில் வீடுகள் சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பட்டது.

மேற்படி வீடுகளை “இறுப்பிட்டி மக்களின்” சார்பில் கனடா இறுப்பிட்டி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில், கட்டிடக் கலைஞர் திரு.தினேஷ் அவர்களின் குழுவினரால் இவ்வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இதுக்குரிய நிதியை புலம்பெயர் இறுப்பிட்டி மக்கள் வழங்கி உதவியது குறிப்பிடத்தக்கது.

-“அதிரடி” இணையத்துக்காக “புங்கையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.