இந்திய குடிமக்களுக்கு எதிராக கடந்த 6 வருடங்களில் 140 தேசத்துரோக வழக்குகள் பதிவு..!!

இந்திய மாநிலங்களவை எம்.பி. சையது நசீர் ஹுசைன் ‘‘கடந்த ஆறு வருடங்களில் இந்திய குடிமக்களுக்கு எதிராக 140 தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 1 சதவீதம் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள், யாருமே அரசை எதிர்த்து பேசக்கூடாது அல்லது போராட்டம் நடத்தக் கூடாது என விரும்புகிறார்கள். பொதுமக்களிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்த விரும்புகிறார்கள்.
திஷா ரவியை கர்நாடக போலீஸுக்கும், மாநில அரசுக்கும் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் கைது செய்துள்ளனர். இதுபோன்ற கைதுகள் ஏற்கனவே சிஏஏ-என்ஆர்சி வழக்குகளில் நடைபெற்றுள்ளன. பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்திலும் நடந்துள்ளது’’ என்றார்.