;
Athirady Tamil News

யாழ் இந்துக்கல்லூரியில் சாரணியத்தின் தந்தை பேடன் பவல் பிரபு பிறந்த தினம் சிறப்பாக அனுஷ்டிப்பு!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சாரணர்களினால் சாரணர் ஸ்தாபகர் பேடல் பவல் பிரபு அவர்களது 164ஆவது பிறந்த தின நிகழ்வு கல்லூரி அதிபர் திரு.R.செந்தில் மாறன் அவர்களின் வழிகாட்டலில் சாரணன் செல்வன் தனுராஜ் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாயின.

முதலில் மரம் நடுகை நிகழ்வு இடம்பெற்ற பின்னர் சாரணர் பயிற்சி கூடத்தில் சாரணர்களினால் பேடன் பவல் பிரபுவின் படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு சாரணன் தனுராஜ் அவர்களினால் தலைமையுரை இடம்பெற்ற பின்னர் ஆசிரியர் திரு. க .சுவாமிநாதனினால் “ஆளுமை மிக்க தலைவனை உருவாக்குவதில் சாரணியத்தின் பங்கு ” எனும் தலைப்பில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து சாரணன் செல்வன் பாணுஜனால் பேடன் பவல் பிரபுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய பேச்சு இடம் பெற்றது. தொடர்ந்து ஆசிரியர் திரு. ஜீவக நாதனால் பாடசாலையில் இவ்வாறான நிகழ்வு கொண்டாடப்பட வேண்டிய அவசியம் பற்றி எடுத்துக் கூறினார். இறுதியில் செல்வன்.சி.பிரவீனன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × two =

*