;
Athirady Tamil News

யாழ். கலாசார மத்திய நிலையத்தின் நிர்வாகம் மாநகர சபையிடமே இருத்தல் வேண்டும் – சி.வி.கே.சிவஜானம் ஆளுநருக்கு கடிதம்!!!

0

யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தின் நிர்வாகம் மாநகர சபையிடமே இருத்தல் வேண்டும் என குறிப்பிட்டு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் கூறிப்பிடப்பட்டுள்ளதாவது…

புதிதாக யாழ்ப்பாணம் பொது நூலகத்தக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு தொடர்பாக பல சர்ச்சைக்குரிய செய்திகள் ஊடகங்களில் வெளிவருவதைக் காணக்கூடியதாக உள்ளது .

1960 களில் நிர்மாணிக்கப்பட்டு யுத்த சூழ்நிலையில் சேதமடைந்த திறந்தவெளி அரங்குக்கு பதிலாக அமைக்கப்பட்டதாகும் இந்த கலாசார மத்திய நிலையம் , திறந்தவெளி அரங்கு யாழ்ப்பாணம் மாநகர சபைக்குரிய ஆதனத்தில் அதன் செலவில் நிர்மாணிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டதாகும்.

இந்தியாவின் பாரிய முழு நிதிப்பங்களிப்பின் மூலம் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக இந்த கலாசார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது . இதன் பராமரிப்புக்கு போதுமான நிதிவசதி யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் இல்லை என்பது யதார்த்தமானது.

எனினும் அதன் நிர்வாகம் மாநகர சபையிடமே இருத்தல் வேண்டும் என்பது எந்தவித கேள்விகளுக்கும் அப்பாற்பட்டதாகும். எனவே , இந்த விடயத்தில் தனித்து மாநகர சபை மீது பாரிய நிதித்தாக்கத்தை சுமந்து மக்களின் சேவைகளைப் பாதிக்காத வகையில் நிதி மூலங்களுக்கான வாய்ப்புக்களை வடக்கு மாகாண நிர்வாகமும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் எனவும் இதன் நிதித்தாக்க விடயத்தில் கவனமும் , கட்டுப்பாடும் செலுத்த வேண்டும் என அன்புடன் வேண்டுகின்றேன் என சி.வி.கே.சிவஞானம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + five =

*