இம்ரான் கான் இலங்கை வந்தடைந்தார்!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்று முன்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பிரகாரம் அவர் இவ்வாறு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.