;
Athirady Tamil News

சட்டசபை தேர்தலில் நான் கோல்கீப்பராக இருப்பேன், பாஜகவால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது – மம்தா பானர்ஜி..!!

0

மேற்குவாங்காளத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ளது. திரிணாமுல் காங்கிரசை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற பாஜக போராடி வருகிறது. இதனால் மாநிலத்தில் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது, அதே நேரத்தில் பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக நாற்காலியைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஹூக்ளியில் நடந்த ஒரு பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:-

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விட மோசமான விதி பிரதமர் மோடிக்கு காத்திருக்கிறது. சட்டசபை தேர்தலில் நான் கோல்கீப்பராக இருப்பேன், பாஜகவால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது. எந்த மோடியும், குஜராத்தும் வங்காளத்தை ஆளாது, வங்காளம் மட்டுமே வங்காளத்தை ஆளும்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியின் மனைவியை சிபிஐ விசாரிப்பது எங்கள் பெண்களை அவமதிப்பதாகும் என கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + one =

*