;
Athirady Tamil News

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை நடத்த சகல ஏற்பாடுகளும் தயார்!!

0

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி ஒன்பது நாள்கள் நடைபெறும் என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்

இதுதொடர்பில் அவர் தெரிவித்ததாவது;

கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டாலும் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளன். எந்தவொரு மாணவருக்கும் தொற்று ஏற்பட்டலாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு சிறப்பு பரீட்சை நிலையங்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு பரீட்சை நாடுமுழுவதும் உள்ள 4 ஆயிரத்து 513 நிலையங்களில் நடைபெறும். கூடுதல் சிறப்பு பரீட்சை நிலையங்களை தயாரிப்பதற்காக மாகாண அளவில் 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது.

அப்பகுதியின் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாணவர்களின் முழுமையான ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி அவர்கள் அதற்கான சிறப்புத் திட்டத்தைத் தயாரித்துள்ளனர்.

ஏதேனும் பாதகமான வானிலை நிலவரங்களை தீர்ப்பதில் கடற்படை மற்றும் பாதுகாப்பு படையினர் நேரடியாக ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து சவால்களையும் மீறி மாணவர்களின் கல்வி தடையின்றி தொடர்வதை உறுதி செய்ய கல்வி அமைச்சு முழுமையான கவனம் செலுத்தும்.

2020ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தாமதங்களை எதிர்கொண்ட போதிலும், வழமையான காலப்பகுதிக்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும்.

வரும் ஜூலையில் உயர்தர வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க கல்வி அமைச்சு விரும்புகிறது- என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 1 =

*