;
Athirady Tamil News

யாழ்.கீரிமலை நகுலேஸ்வரருக்கு நாளை கொடியேற்றம்!!

0

ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகப் போற்றப்படுகின்றதும், வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான கீரிமலை ஸ்ரீ நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா நாளை வெள்ளிக்கிழமை (26) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

நாளை முற்பகல்-11.15 மணி முதல் நண்பகல்- 12 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் இவ்வாலய மகோற்சவப் பெருந் திருவிழா தொடர்ந்தும் 15 தினங்கள் காலை, மாலை உற்சவங்களகா நடைபெறும்.

இவ்வாலய மகோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்-10 ஆம் திகதி புதன்கிழமை இரவு பெரிய சப்பறத் திருவிழாவும், 11 ஆம் திகதி வியாழக்கிழமை காலை தேர்த் திருவிழாவும், அன்றைய தினம் இரவு நான்கு சாமப் பூசையுடன் சிவராத்திரி உற்சவமும், 12 ஆம் திகதி காலை தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.

இதேவேளை, இவ்வாலய மகோற்சவப் பெருவிழாவில் கலந்து கொள்ளும் அடியவர்கள் அனைவரும் சுகாதார அறிவுறுத்தலின்படி கைகால்களைக் கழுவி, முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துக் கலந்து கொள்ளுமாறு ஆலய ஆதீன கர்த்தா அறிவித்துள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 17 =

*