;
Athirady Tamil News

கொவிட் 19 சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி!!

0

கொவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் அல்லது நல்லடக்கம் செய்ய
அனுமதிக்கும் வர்த்தமானி அறிவிப்பு சுகாதார அமைச்சினால் இன்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னைய கட்டளையில் தகனம் மட்டுமே என்ற சொற்பதம் நீக்கப்பட்டு தகனம் அல்லது அடக்கம் என்று மாற்றப்பட்டுள்ளது.

அத்துடன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்படும் பணிப்புரைக்கு அமைய அத்தகைய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் முறையான அதிகாரியினால் அங்கீகரிக்கப்படும் சுடலை அல்லது இடத்தில் அடக்கம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − twelve =

*