;
Athirady Tamil News

திவுலப்பிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 77 ஆயிரத்தை தாண்டியது!!

0

நாட்டில் மேலும் 466 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக் களம் தெரிவித்துள்ளது.

அதில் 464 பேர் திவுலப்பிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, திவுலப்பிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 77 ஆயிரத்து 827ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 81 ஆயிரத்து 933 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 4 ஆயிரத்து 513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம் 447 கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண் ணிக்கை 76 ஆயிரத்து 961 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 459 ஆக அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × four =

*