முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் எழுதிய இரு நூல்கள் பிரதமரிடம் கையளிப்பு!!

மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் நாராஹேன்பிட அபயராமாதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய முறுத்தெட்டுவே ஆனந்த தேரரினால் எழுதப்பட்ட இரு நூல்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (26) பிற்பகல் வழங்கி வைக்கப்பட்டது.
´ரன் ஹீய´ மற்றும் ´ஹெல வெதகமே யடகியாவ´ (சுதேச வைத்தியத்தின் வரலாறு) ஆகிய இரு நூல்கள் இவ்வாறு கலாநிதி முறுத்தெட்டுவே ஆனந்த தேரரினால் பிரதமரிடம் வழங்கிவைகப்பட்டது.
இந்நிகழ்வு நாராஹேன்பிட அபயராம விகாரையின் மண்டபத்தில் இடம்பெற்றது.
ஹீய எனும் பெயரில் கலாநிதி வணக்கத்திற்குரிய முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் சிலுமின பத்திரிகைக்கு எழுதிய பத்திகளின் தொகுப்பு ´ரன் ஹீய´ நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் இந்துறுகாரே தம்மரதன தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.