பொலிஸாரின் மிகவும் கொடுமையான நடவடிக்கைகளை சிறிதளவும் சகித்துக்கொள்ளக்கூடாது – சாலிய பீரிஸ் கருத்து!!

பொலிஸாரின் மிகவும் கொடுமையான நடவடிக்கைகளை சிறிதளவும் சகித்துக்கொள்ளக்கூடாது என சட்டத்தரணி சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார்
பேலியகொட பொலிஸாரினால் சட்டக்கல்லூரி மாணவன் மிகமோசமாக தாக்கப்பட்டமை குறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ள கருத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பேலியகொடவில் சட்டக்கல்லூரி மாணவன் மிகரா குணரட்ண பொலிஸாரின் ஈவிரக்கமற்ற தாக்குதலிற்கு உள்ளானமை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது என சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் ஈவிரக்கமற்ற தன்மையை சிறிதளவும் சகித்துக்கொள்ளகூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகளிற்கு எதிராக மிகவேகமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.