;
Athirady Tamil News

காணாமல்போனவர்களின் உறவினர்களை ஜனாதிபதி விரைவில் சந்திக்கவுள்ளார் – வெளிவிவகார அமைச்சின் செயலாளர்!!

0

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச விரைவில் காணாமல்போனவர்களின் உறவினர்களை சந்திப்பார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கொலம்பகே தெரிவித்துள்ளார் என இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி உண்மையில் இந்த விவகாரத்திற்கு முடிவை காண்பதற்கும் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களிற்கு தீர்வொன்றை காண்பதற்கும் உறுதிபூண்டுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைசெவிமடுக்க விரும்புகின்றார்,அவர்களுடைய உண்மையான துயரங்களை செவிமடுக்க விரும்புகின்றார் அவர்களிற்கு ஒரு தீர்வை முன்வைக்க விரும்புகின்றார் இது விரைவில் இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × four =

*