மானிய விலையில் தென்னம் பிள்ளைகள் !!

தென்னை பயிர்ச்செய்கை சபையின் மூலமாக தென்னம்பிள்ளைகள் மானிய விலையில் பெற்றுக்கொள்வது தொடர்பாக, பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் போல் தென்னம்பிள்ளைகள் நேரடியாக தென்னை பயிர்ச்சபையின், தென்னை நாற்று மேடையில் மானிய விலையில் பெற்றுக்கொள்ள முடியாது.
இந்த முறைக்கு பதிலாக, பிரதேசத்துக்குப் பொறுப்பான தெங்கு அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூரணப்படுத்தி வழங்கப்பட்ட பின்னர், அவரின் நேரடி கள விஜய அவதானிப்பின் பின்னரே, மானிய விலையில் தென்னம்பிள்ளைகள் வழங்கப்படும்.
உறையிடப்பட்ட தென்னம்பிள்ளை 200 ரூபாய்க்கும், உறையிடப்படாத தென்னம்பிள்ளை 125 ரூபாய்க்கும் மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
இது தவிர, தென்னை தோட்டங்களை அபிவிருத்தி செய்ய தோட்ட உரிமையாளர்களுக்கு பல்வேறு விதமான திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு தோட்ட உரிமையாளருக்கு 10 இலட்சம் ரூபாய் வரை 8 சதவீத வட்டி அடிப்படையில் கடனும் வழங்கப்படவுள்ளது. சகல விதமான மானியங்களும் வரையறுக்கப்பட்டதும், நிபந்தனைகளுக்குட்பட்டதுமாகும்.
மேலதிக விவரங்களுக்கு பிரதேசத்துக்கு பொறுப்பான தெங்கு அபிவிருத்தி உத்தியோகத்தரோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.