;
Athirady Tamil News

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கொவிட் -19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பரீட்சை!! (படங்கள்)

0

2020ஆம் ஆண்டுக்கான க.பொ. த. சாதாரண பரீட்சை இன்று (மார்ச் 1) திங்கட்கிழமை ஆரம்பமாகி வரும் 10ஆம் திகதி புதன்கிழமை வரை இடம்பெறுகிறது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கொவிட் -19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் காலை 7.30 மணிக்கு பரீட்சை மண்டங்களுக்கு வருகை தந்தனர்.

பரீட்சாத்திகளை காலை 7.45 மணிக்கு பரீட்சை நிலையத்துக்கு வருகை தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியிருந்தார்.

நாடுமுழுவதும் 4 ஆயிரத்து 513 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறுகிறது. 6 லட்சத்து 22 ஆயிரத்து 352 பரீட்சாத்திகள் தோற்றுகின்றனர்.

இதேவேளை, இம்முறை பரீட்சை நிலையங்களின் சுகாதார நடைமுறைகளுக்காக 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

வடக்கு மாகாணத்தில் க.பொ.த சாதாரணப் பரீட்சைக்கு 44 ஆயிரத்து 245 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.!!

சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அறிவிப்பு !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 11 =

*