;
Athirady Tamil News

யாழ். பல்கலைக்கழக வேந்தரின் சிறப்புரை நிகழ்வு!! (படங்கள்)

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின் ஒரு பாகமாக அமையும் பல்கலைக்கழக வேந்தரின் சிறப்புரை நேற்று, 02 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை கைலாசபதி கலையரங்கில், துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.

”பழங்காலப் பதிவுகளும் நிகழ்காலப் பார்வைகளும் – மகாவம்சமும் வரலாற்று நூல்களும்” என்ற தலைப்பில் யாழ். பல்கலைக்கழக வேந்தர், தகைசார் வரலாற்றுப் பேராசிரியர் எஸ். பத்மநாதன் சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்வில், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதுவர் எஸ். பாலச்சந்திரன், தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் கலாநிதி எஸ். ஜெபநேசன், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
படப்பிடிப்பு : யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 18 =

*