;
Athirady Tamil News

கொலை செய்யப்பட்டபெண் அடையாளம் காணப்பட்டார்!!

0

கொழும்பு – டாம் வீதி, ஐந்துலாம்பு சந்தி பகுதியில் பயணப் பையில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குருவிட்டை பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த பெண்ணுடையது என சந்தேகிக்கப்படும் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவத்துடன் தொர்புடையவர் உப பொலிஸ் பரிசோதகர் என தெரியவந்துள்ள நிலையில், அவர் பதுல்கும்புரவில் அமைந்துள்ள அவரது விட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 2 =

*