இரணைதீவில் அடக்கம் செய்யும் அறிவுறுத்தலை வழங்கும் சுற்றறிக்கை வெளியீடு!!

கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழப்பவர்களின் அடக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கை இன்று சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசெலா குணவர்தன தெரிவித்ததாவது;
கோவிட்-19 நோயால் உயிரிழந்தோரின் சடலங்களை இரணை தீவை பொருத்தமான இணமாக அரசு அடையாளம் கண்டுள்ளது.
மாகாண சபைகளின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாகாண, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் பிற தொடர்புடைய அரச அதிகாரிகள் அடங்கிய குழுவை அந்தந்த மாவட்டங்களின் பொருத்தமான உடங்களைத் தேர்வுசெய்து, அதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்புமாறு சுற்றறிக்கை கோரியுள்ளது.
அதுவரை இரணைதீவு பொருத்தமான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் அரச செலவில் கொண்டு செல்லப்படும். கொழும்பு தலைமை சட்ட மருத்துவ அதிகாரி அலுவலகம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள வெலிகந்த அடிப்படை மருத்துவமனை ஆகியவற்றிலிருந்து போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் இரு இடங்களுக்கும் கொண்டு வரப்பட்டு பின்னர் இரணை தீவுக்கு கொண்டு செல்லப்படும்.
இரணை தீவில் சடலம் அடக்கம் செய்யும் போது உறவினர்கள் இருவர் அனுமதிக்கப்படுவார்கள். அடக்கம் செய்வதைக் கண்காணிக்க அப்பகுதியின் பொது சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரி சமூகமளிப்பர்.
படையினரை இந்தப் பணிக்கு ஒத்துழைப்பார்கள்.
உறவினர்களுக்கு உடலை அடையாளம் காணவும், இறுதி சடங்குகள் மற்றும் மத சடங்குகளை மருத்துவமனையில் செய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு சவப்பெட்டி சீல் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்லப்படும் – என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை – அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு!!
கொரோனா தொற்றால் இறந்தவர்களில் உடல்களை இரணை தீவில் புதைப்பதற்கு எதிர்ப்பு !!