இந்திய விசா சேவைகளுக்கான (IVS) விண்ணப்பமையமானது 2021 இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.!!

கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக 2020 மார்ச் 13ஆம் திகதியிலிருந்து மூடப்பட்ட இல. 145, கோவில் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய விசா சேவைகளுக்கான (IVS) விண்ணப்பமையமானது 2021 இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
இந்திய விசா சேவைகளுக்கான (IVS) விண்ணப்ப மையத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் முற்பகல் 09.00 மணி முதல் 13.00 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். கொவிட் -19 பெருந்தொற்றுக் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள சுற்றுலா விசா தவிர்ந்த ஏனைய அனைத்து வகை விசா விண்ணப்பங்களும் இங்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பதாரர்கள் IVS விண்ணப்ப மையத்தில் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை செலுத்துவதன் மூலம் தங்களது விசாவழங்கப்பட்ட கடவுச்சீட்டுக்களை (பாஸ்போட்) தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது IVSவிண்ணப்ப மையத்தில் புதன்கிழமைகளிலும் அல்லது தூதரகத்திலிருந்து வேலை நாட்களில் 17.00 முதல் 17.30 மணிவரை நேரடியாக தமது கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அவசர தேவைகளுக்கான விண்ணப்பதாரர்கள் புதன்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் முற்பகல் 09.00 – 1200 மணிவரை நேரடியாக யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
இலத்திரனியல் விசா விண்ணப்பம், மற்றும் பல்வேறு வகை விசாக்களுக்கு தேவையான ஆவணங்கள் மேலும் பிற தேவைகள் குறித்த தகவல்களுக்கு துணைத் தூதரகத்தின் இணையத்தளமான “cgijaffna.gov.in” இல் உள்ள “விசா” மெனுவைப் பார்வையிடவும்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”