;
Athirady Tamil News

தவறவிடப்பட்ட பணம் மற்றும் கைத்தொலைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த காப்பாளர்!!

0

பஸ் ஒன்றில் தவறவிடப்பட்ட பணம் மற்றும் கைத்தொலைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த பருத்தித்துறை பஸ் டிப்போவின் காப்பாளர் பாலமயூரனுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு – பருத்தித்துறை சேவையில் ஈடுபட்ட பஸ்ஸில் தவறவிடப்பட்ட 2,51,000 ரூபா பணத்தையும் சுமார் 70,000 ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி கண்டெடுத்துள்ளார்.

இதனையடுத்து அவர், அதனை உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார்.

அவற்றை தவற விட்டவரை அடையாளம் கண்டு பருத்தித்துறை பஸ் டிப்போவுக்கு இன்று (04) அழைத்து அவரிடம் பணம் மற்றும் கைத்தொலைபேசியை பாலமயூரன் ஒப்படைத்தார். அவரது இந்த செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two − 2 =

*