விக்ரமராச்சி சுதேச மருத்துவக் கல்லூரி கம்பஹா பல்கலைக்கழகமாக மாற்றப்பட உள்ளது!!

கம்பஹா விக்ரமராச்சி சுதேச மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமை வகித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல், கொழும்பிலுள்ள பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி இது இலங்கையின் 16 வது பல்கலைக்கழகம் என்பதுடன் ஏழு புதிய பட்டப்படிப்புகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒரு குழுவிற்கு 50 மாணவர்களுடன் 2021 ஆம் ஆண்டில் 350 மாணவர்கள் இணைக்கப்பட உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”