நல்லூரான் வளைவு அமைக்கும் பணி!!

நல்லூரான் வளைவு அமைக்கும் பணிக்காக எதிர்வரும் 07 ஆம் திகதி மாலை 6.00 மணி தொடக்கம் சுமார் ஒரு மாத காலத்திற்கு நாவலர் வீதியிலிருந்து நல்லூர் ஆலயம் வரையான கோவில் வீதியில் வாகனங்கள் பயணிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என யாழ் மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.
இதற்கான மாற்றுப் பாதையாக நல்லூர் ஆலயத்திலிருந்து கோவில் வீதியூடாகச் செல்லும் சிறியரக வாகனங்கள் செட்டித்தெரு வீதி , செட்டித்தெரு ஒழுங்கை (சின்மயா மிஷன் வீதி ) ஊடாகச் சென்று நாவலர் வீதியையும் , நாவலர் வீதியால் வரும் வாகனங்கள் செட்டித்தெருவீதி , செட்டித்தெரு ஒழுங்கை ( சின்மயா மிஷன் வீதி ) ஊடாகச் சென்று கோவில் வீதியையும் அடையலாம்.
கனரக வாகனங்கள் இக்காலத்தில் இப் பகுதியில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது .
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”