;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் அதிகாரிகளுக்கு மிரட்டல்!!

0

அத்துடன், யாழ்., கிளிநொச்சி மக்களால் தொடர்ச்சியாக தெரிவுத் செய்யப்பட்டு சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிரேஷ்ட அமைச்சராகவும் இருக்கின்ற தன்னை மக்களிடம் இருந்து சண்டித்தனத்தினால் பிரித்து விடமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொம்மையாக இருந்துவிட்டு அரசியலுக்குள் வரவில்லை எனவும் பல நெருப்பாறுகளைக் கடந்தே தமிழ் மக்களின் அரசியலுக்குள் வந்தவன் என்றும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் சௌபாக்கியா வாரத்தினை அங்குரார்ப்பணம் செய்து பயனாளிகளுக்கு உதவித்திட்ட காசோலைகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “யாழ். மாவட்ட மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரின் பெயரால் அவரின் இணைப்பாளர்கள் எனப்படுவோர் மிரட்டல் விடுப்பதாகவும் அழுத்தம் கொடுப்பதாகவும் பல முறைப்பாடுகள் எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

அவ்வாறான அநாகரீகமான செயற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருக்கு தெரிந்து நடக்கின்றதா, தெரியாமல் நடக்கின்றதா என்பது தொடர்பாக அவருடன் கலந்துரையாடவுள்ளேன். அவருக்குத் தெரியாமல் நடக்குமாக இருந்தால் இவ்வாறான அநாகரிகமான செயலை அவர் கட்டுப்படுத்த வேண்டும்.

மாறாக, அவருக்குத் தெரிந்துதான் அரச அதிகாரிகளுக்கான மிரட்டலும் அழுத்தங்களும் அவரது இணைப்பாளர்களால் விடுக்கப்படுமானால் அது தொடர்பாக ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் பேசி முடிவொன்றைக் காண்பேன்.

யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்லாது கிளிநொச்சி அதிகாரிகளிடமும் அழுத்தங்கள் பிரயோகித்திருக்கின்றனர். எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை யாழ். அரசாங்க அதிபரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு ஆலோசனையும் கூறியிருக்கின்றார்கள்.

ஆனால், சிரேஷ்ட அதிகாரியான கிளிநொச்சி அரச அதிபர், தகுந்த யாருடைய ஆலோசனையையும் கேட்கும் அவசியம் தனக்கு இல்லையென தகுந்த பதிலளித்துள்ளார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மக்களினால் தொடர்ச்சியாகத் தெரிவுசெய்யப்பட்டு சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிரேஷ்ட அமைச்சராகவும் இருக்கின்ற என்னை இந்த மக்களிடம் இருந்து சண்டித்தனத்தினால் பிரித்து விடமுடியாது.

நான் தூரத்தே இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு அதாவது, ஒரு பொம்மையாக இருந்துவிட்டு அரசியலுக்குள் வரவில்லை. பல நெருப்பாறுகளைக் கடந்தே தமிழ் மக்களின் அரசியலுக்குள் வந்தவன்.

மேலும், அரசியல் தலைமைகளின் தவறான தீர்மானங்களினால் சொல்லொணாத் துன்பங்களையும் கணக்கெடுக்க முடியாத இழப்புகளையும் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது கிடைத்திருக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி மக்களின் வாழ்வைக் கட்டியெழுப்பவே முயற்சிக்கின்றேன்.

யதார்த்தத்தினைப் புரிந்துகொண்டு மக்கள் சரியான தெரிவுகளை மேற்கொண்டு பயனடைந்துகொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × one =

*