;
Athirady Tamil News

மயிரிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட புங்குடுதீவு மாணவனுக்கு மதிப்பளிப்பு..

0

மயிரிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட புங்குடுதீவு மாணவனுக்கு மதிப்பளிப்பு.

யாழ் வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலத்தில் இம்முறை புலமைப் பரீட்சை பாடத்தில் வெட்டுப் புள்ளியை ஒரே ஒரு புள்ளியினால் தவறவிட்ட அதாவது வெட்டுப் புள்ளி 160 ஆக இருக்கும் போது கவிஷன் அவர்கள் 159 புள்ளிகளை எடுத்து ஒரே ஒரு புள்ளியினால் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவன் கௌரவப்படுத்தப்பட்டார்.

புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த கமலதாசன் கவிஷன் என்ற மாணவனை கௌரவிக்கும் அதேவேளை அம்மாணவனை தைரியப்படுத்தி, எதிர்காலத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்வதற்கு ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் “புங்குடுதீவு பாணாவிடை சிவன் ஆலய” அறங்காவல் சபையின் கௌரவத் தலைவர் எஸ்.கே.சண்முகலிங்கம் (சமாதான நீதவான்) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புலம்பெயர் உறவான லண்டன் மாநகரில் வசிக்கும் உதயன் எனும் திரு.செல்லத்துரை உதயகுமார் அவர்களின் பங்களிப்பில் வழங்கப்பட்ட இருபதாயிரம் ரூபாவினை வேலணையில் அமைந்துள்ள இலங்கை வங்கியில் வைப்புச் செய்யப்பட்டு வங்கிப் புத்தகமும் வேறு சில அத்தியாவசியமான பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த மாணவரின் முயற்சியை கௌரவித்து பாராட்டி வெகுமதியும் கொடுக்கப்பட்டதை பலரும் பாராட்டினார்கள். ஒரு புள்ளியால் மாணவனது மனதைரியம் பாதிக்கப்படக் கூடாது என்ற வகையிலே இதனை ஒழுங்குபடுத்திய பெரியவர்களை பலரும் பாராட்டி உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.