;
Athirady Tamil News

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,711 பேருக்கு கொரோனா .!!

0

இந்தியாவில் கொரோனாவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 100 பேர் உயிரிழந்த நிலையில், 14,392 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றை இந்தியா மிகச்சிறப்பான வகையில் கட்டுப்படுத்தியது. மகாராஷ்டிரா, கேரளாவில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வந்தது.
தற்போது சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இந்தியா அளவிலும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.

14,392 டிஸ்சார்ஜ் செய்யப்பட இதுவரை 1,08,68,520 குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 100 பேர் உயிழக்க, இதுவரை 1,57,756 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 1,84,523 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் 2,09,22,344 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + thirteen =

*