;
Athirady Tamil News

பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட, சுலக்ஸனின் பிறந்தநாள் நிகழ்வு.. (படங்கள்)

0

பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட, சுலக்ஸனின் பிறந்தநாள் நிகழ்வு.. (படங்கள்)

21.10.2016 ஆம் ஆண்டு பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான வி.சுலக்ஸன், ந.கஜன் ஆகியோரில் சுலக்ஸனின் 28ஆவது ஆண்டு ஜனனதின நினைவஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது.

சுன்னாகத்தில் அமைந்துள்ள சுலக்ஸன், கஜன் ஞாபகார்த்த பேருந்து தரிப்பிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிகழ்வில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் கலந்து கொண்டு நினைவுச்சுடரினை ஏற்றி வைத்தார்.

இதன்போது புளொட் யாழ். மாவட்ட முக்கியஸ்தரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன், புளொட் உறுப்பினர்களும் வலிதெற்கு பிரதேச சபை தலைவர் க.தர்ஷன், சாவகச்சேரி முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் சுலக்ஸனின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களான சுலக்ஸன், கஜன் ஆகியோரின் நினைவாக கல்வி ஊக்குவிப்பு நிதியம் ஆரம்பிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகை வைப்பிலிடப்பட்டு வங்கி கணக்கு புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தகவல் & படங்கள்.. “புளொட்” ஊடகப்பிரிவு, யாழ்ப்பாணம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 4 =

*