;
Athirady Tamil News

500 தேசியக்கொடி கம்பங்கள், 52 தேசப்பற்று வாரம்: டெல்லி அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு ..!!

0

இந்தியாவின் சுதந்திர தினவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ந்தேதி கொண்டாடப்படும். இந்த வருட சுதந்திர தினம் 75-வது ஆண்டு தினமாகும். இதை மிகவும் சிறப்பான வகையில் கொண்டாட டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லி அரசு பட்ஜெட் தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டை தேசப்பற்றை கருப்பொருளாக கொண்டு நிதியமைச்சர் மணிஷ் சிசோடியா தாக்கல் செய்துள்ளார்.
தேசப்பற்று வாரங்கள் என வருகிற 12-ந்தேதியில் இருந்து அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி வரை 75 வாரங்கள் டெல்லி அரசால் கொண்டாடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 45 கோடி ரூபாய் செலவில் 500 பிரமாண்ட தேசியக்கொடி கம்பங்கள் நிறுவப்படும். அவைகள் சென்டிரல் பார்க்கில் உள்ளது போன்று இருக்கும் என்றார்.
இளைஞர்களிடையே தேசபக்தி உணர்வை ஊக்குவிக்கும் வகையில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் மற்றும் அம்பேத்கர் குறித்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அரசு ஏற்கனவே தலா ரூ. 10 கோடி ஒதுக்கியுள்ளது என சிசோடியா கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.