உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா .!!

உத்தரகாண்ட் மாநில முதல்வராக இருந்தவர் திரிவேந்திரி சிங் ராவத். இவர் நேற்று டெல்லியில் பா.ஜனதா தலைவர்களை சந்தித்தார். இந்த நிலையில் இன்று மதியம் கவர்னர் பேபி ராணி மயூராவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
உள்கட்சி பூசல் காரணமாக ராவத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. அடுத்த வருடம் உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் போட்டியில் மீண்டும் வெற்றி பெறுவது கடினம் எனக் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
தன் சிங் யாதவ் அடுத்த முதல்வராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.